கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

நியூசிலாந்தில் மீண்டும் பொதுமுடக்கம்

நியூசிலாந்தில் 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் 3 நாள் பொதுமுடக்கத்தை அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்.

News image
பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்
Updated On :28 ஜனவரி 2024, 3:56 am

DIN

நியூசிலாந்தில் 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் 3 நாள் பொதுமுடக்கத்தை அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்.

நியூசிலாந்து நாட்டில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக கடந்த 6 மாதங்களாக தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்நாட்டின் ஆக்லாந்து பகுதியில் வசித்துவந்த 58 வயதான நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து ஆக்லாந்து மற்றும் கோரமண்டல் பகுதியில் ஒரு வார கால பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 நாள் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.