கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

அமெரிக்காவில் 9 லட்சம் குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு

கரோனா தொற்றுப் பரவல் ஆரம்பித்த நாளிலிருந்து அமெரிக்காவில் இதுவரை சுமார் 9,20,000 குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

News image
அமெரிக்காவில் 9 லட்சம் குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு
Updated On :27 ஜனவரி 2024, 5:52 pm

IANS


வாஷிங்டன்: கரோனா தொற்றுப் பரவல் ஆரம்பித்த நாளிலிருந்து அமெரிக்காவில் இதுவரை சுமார் 9,20,000 குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் குழந்தைகள் நல மையம் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனைகளின் கூட்டமைப்பு இணைந்து வெளியிட்ட புள்ளி விவரத்தில், கடந்த அக்டோபர் 29 முதல் நவம்பர் 5-ம் தேதி வரை மட்டும் 73,883 குழந்தைகளுக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இது மிக அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் இரண்டு நாள்களில் இந்த அளவுக்கு குழந்தைகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இது 17 சதவீதம் அதிகமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து அமெரிக்காவில்  இதுவரை ஒட்டுமொத்தமாக 9,27,518 குழந்தைகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் இது ஒரு லட்சம் குழந்தைகளுக்கு 1,232 பேருக்கு கரோனா உறுதி செய்யப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.