பாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

அதிகரிக்கும் சைபர் தாக்குதல்கள்: இணைய பாதுகாப்பு மென்பொருள்களை இலவசமாக வழங்கும் நிறுவனம்

இணைய பாதுகாப்பு மென்பொருள் ஆராய்ச்சி  மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, கரோனா பாதித்துள்ள நாடுகளுக்கு தனது இணைய பாதுகாப்பு மென்பொருள்களை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.

News image

சைபர் அட்டாக்

Updated On :29 மார்ச் 2020, 12:11 pm

புது தில்லி: இந்தியாவைச் சேர்ந்த இணைய பாதுகாப்பு மென்பொருள் ஆராய்ச்சி  மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, கரோனா பாதித்துள்ள நாடுகளுக்கு தனது இணைய பாதுகாப்பு மென்பொருள்களை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.

K7 கம்ப்யூடிங் என்பது இந்தியாவைச் சேர்ந்த பிரபலமான உள்நாட்டு இணைய பாதுகாப்பு மென்பொருள் ஆராய்ச்சி  மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் கணினி , மொபைல் மற்றும் சிறு நிறுவனங்களுக்கான ‘கிளவுட் கம்ப்யூட்டிங்’ பாதுகாப்பு மென்பொருள்களைதயாரித்து விநியோகித்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவு கடந்த மாதம் 2 ஆம் தேதி முதல் இந்த மாதம் 25-ஆம் தேதி வரை நடத்திய உலகளாவிய ஆராய்சிகளில், உலக அளவில் நடைபெறும் இணையத் தாக்குதலகள் 30% அதிகரித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அதிலும் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில் இத்தகைய மோசடிகளும் உலகின் பல நாடுகளில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் K7 நிறுவனமானது தனது இணைய பாதுகாப்பு மென்பொருள்களை, கரோனா பாதித்துள்ள நாடுகளுக்கு அவை  விரும்பும்வரை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.

இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின்  நிறுவனர் கேசவர்தனன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.