டெஹ்ரான்: கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஈரானில் இருக்கும் சிறைக் கைதிகளை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
ஈரான் நாட்டில் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் சுமார் 70 ஆயிரம் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய அந்நாட்டு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஈரான் சிறைகளில் இருக்கும் கைதிகளுக்கு கரோனா வைரஸ் பரவினால், இழப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையாக, சிறைகளில் இருக்கும் சுமார் 70 ஆயிரம் கைதிகளை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்தது.
இது குறித்து ஈரான் தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைஸி கூறுகையில், பொது மக்களின் பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்ற நிலையில்தான் சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். ஒரு வேளை பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் இவர்கள் மீண்டும் சிறைக்குக் கொண்டு வரப்படுவார்கள். இந்த விடுதலை என்பது தற்காலிகமானதுதான் என்று தெரிவித்துள்ளார்.
ஈரானில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,161 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 237 ஆகவும் உயர்ந்ததை அடுத்து, அந்நாட்டு நல்வாழ்வுத் துறை அமைச்சர் அலிரேஸா வஹாப்ஸதேஹ் அளித்த பரிந்துரையை ஏற்று நீதித் துறை இந்த முடிவை எடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேர்தலுக்குப் பிறகும் மேற்கு வங்கத்தில் மத்திய படைகள் : அமித் ஷா
திரிணமூல் கோட்டையில் தேர்தல்! 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏன் முக்கியம்? உண்மையில் யாருக்கு சவால்?

ஆம் ஆத்மியில் 'நச்சுத்தன்மை' வாய்ந்த பணிச்சூழல்! மனம்திறந்த ராகவ் சத்தா!

இரு மலர்கள் தொடருக்கு குவியும் வாழ்த்து!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


