டாக்கா: வங்கதேசத்தில் படகு ஒன்று மற்றொரு படகுடன் மோதி கவிழ்ந்த விபத்தில் 30 பேர் பலியாகினர்.
திங்களன்று வங்கதேசத்தின் முன்ஷிகஞ்ச் பகுதியில் இருந்து தலைநகர் டாக்காவிற்கு ‘மார்னிங் பேர்ட்’ என்னும் பெயர் கொண்ட படகு சுமார் 100 பேருக்கு மேல் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. அப்போது காலை 09.30 மணியளவில் சதார்கட் முனையம் பகுதியில் ‘மொயூர்-2‘ என்னும் பெயர் கொண்ட மற்றொரு படகானது மார்னிங் பேர்ட் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய மார்னிங் பேர்ட் படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்தவர்களில் 30 பேர் பலியானார்கள்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் 19 ஆண்கள், 8 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் என மொத்தம் 30 பேரின் சடலங்களை மீட்டனர்.
வங்கதேச உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துக்கு ஆணைய அதிகாரிகள், மொயூர்-2 படகைக் கைப்பற்றிய போதிலும் படகின் கேப்டன் உள்ளிட்ட முக்கிய ஊழியர்கள் தப்பிவிட்டனர்.
விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த நால்வர் குழு ஒன்றை ஆணையம் நியமித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் அரைசதம் விளாசல்; குஜராத் டைட்டன்ஸுக்கு 4-வது வெற்றி!

பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுக்கிறது காங்கிரஸ், திரிணமூல் : அமித் ஷா
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக லக்னௌ பந்துவீச்சு!

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 4வது காலாண்டு லாபம் 5% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


