வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

ஜெர்மனியில் மேலும் 770 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு 1,88,534 ஆனது

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 770 பேருக்கு புதியதாக கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

News image
germany3062745
Updated On :27 ஜனவரி 2024, 4:49 pm

UNI

மாஸ்கோ: ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 770 பேருக்கு புதியதாக கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 188,534ஐ எட்டியுள்ளது என்று ராபர்ட் கோச் நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றுக்கு இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 8,872 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 580 புதிய வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், 26 பேர் தொற்றுக்கு பலியாகினர்.  இதுவரை 174,100 கரோனா பாதித்து குணமடைந்துள்ளனர். 

உலகம் முழுவதும் கரோனாவால் 85,83,926 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,56,428 பேர் மரணம் அடைந்துள்ளனர். 45,32,580 பேர் குணமடைந்துள்ளனர் என்று ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.