கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

வாக்காளர் இறுதிப் பட்டியல்: புதுக்கோட்டையில் 12.98 லட்சம் பேர்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு...

News image
புதுக்கோட்டை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
Updated On :23 பிப்ரவரி 2026, 7:03 am

இணையதளச் செய்திப் பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் 12.98 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளின் (எஸ்ஐஆர்) முடிவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 12,98,907 வாக்காளர்கள் உள்ளனர். சிறப்புத் திருத்தப் பணிகளில் மொத்தம் 4,280 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) முடிவுற்ற நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான மு. அருணா திங்கள்கிழமை காலை வெளியிட்டார். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

வாக்காளர் விவரங்கள்

எஸ்ஐஆர் திருத்தப் பணிகளுக்கு முன்பு 2025 டிசம்பர் 19 ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி, மாவட்டத்தில் மொத்தம் 12,54,525 வாக்காளர்கள் இருந்தனர்.

டிசம்பர் 19 ஆம் தேதி தொடங்கி 2026 ஜனவரி 30 ஆம் தேதி வரை எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்றன. இதில், மாவட்டம் முழுவதும் மொத்தம் 4,280 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 1,839 பேர் ஆண்கள், 2,440 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை.

48,662 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 21,604 பேர் ஆண்கள், 27,035 பேர் பெண்கள், 23 பேர் திருநங்கைகள்.

2026 ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 12,98,907 பேர் உள்ளனர். இவர்களில் 64,1276 பேர் ஆண்கள், 65,7562 பேர் பெண்கள், 69 பேர் திருநங்கைகள்.

தொகுதி வாரியாக வாக்காளர் விவரங்கள்

கந்தர்வகோட்டை(தனி)- மொத்த வாக்காளர்கள்- 1,94,732, ஆண்கள்- 98,028, பெண்கள்- 96,695, திருநங்கைகள்-9.

விராலிமலை- மொத்த வாக்காளர்கள்- 2,23,084, ஆண்கள்- 1,10,011, பெண்கள்- 1,13,040, திருநங்கைகள்- 33.

புதுக்கோட்டை- மொத்த வாக்காளர்கள்- 2,23,928, ஆண்கள்- 109962, பெண்கள்- 1,13,943, திருநங்கைகள்- 23.

திருமயம்- மொத்த வாக்காளர்கள்- 2,19,279, ஆண்கள்- 1,07,006, பெண்கள்- 1,12,270, திருநங்கைகள்- 3.

ஆலங்குடி- மொத்த வாக்காளர்கள்- 2,10,296, ஆண்கள்- 1,03,987, பெண்கள்- 1,06,309, திருநங்கைகள்- 0.

அறந்தாங்கி- மொத்த வாக்காளர்கள்- 22,7588, ஆண்கள்- 11,2282, பெண்கள்- 11,5305, திருநங்கைகள்- 1.

மீண்டும் திருத்தம் எப்போது?

இதுவரை வாக்காளர் பட்டியலில் சேராத, ஜனவரி 1 ஆம் தேதி 18 வயதை நிறைவு செய்த புதிய வாக்காளர்கள் தொடர்ந்து விண்ணப்பங்களை வழங்கி வாக்காளர் பட்டியலில் சேரலாம்.

குறிப்பாக ஜன. 1, ஏப். 1, ஜூலை 1, அக். 1 ஆகிய நான்கு காலாண்டுகளில் 18 வயதை நிறைவடைவோர் விண்ணப்பம் கொடுத்து பட்டியலில் புதியவர்களாக சேர்ந்து கொள்ளலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 996 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இவற்றில், 85 மையங்கள் நகரப் பகுதியிலும், 881 மையங்கள் கிராமப்பகுதிகளிலும் உள்ளன. இவற்றில் மொத்தம் 1,681 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.