ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

தளபதி சுலைமானி முன்பே கொல்லப்பட்டிருக்க வேண்டியவர்: டொனால்ட் டிரம்ப்

அமெரிக்கர்களைக் கொலை செய்ய திட்டமிட்டிருந்த ஈரானின் முக்கியப் படைத் தளபதி காசிம் சுலைமானி, எப்போதோ கொல்லப்பட்டிருக்க வேண்டியவர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

News image
Updated On :4 ஜனவரி 2020, 5:38 am

அமெரிக்கர்களைக் கொலை செய்ய திட்டமிட்டிருந்த ஈரானின் முக்கியப் படைத் தளபதி காசிம் சுலைமானி, எப்போதோ கொல்லப்பட்டிருக்க வேண்டியவர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

இராக்கில் அமெரிக்கா வெள்ளிக்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் முக்கிய படைத் தலைவா் காசிம் சுலைமானி, இராக் துணை ராணுவத் தலைவா் அபு மஹதி உள்பட 8 போ் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து முதல் முறையாகக் கருத்துக் கூறியிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,  அமெரிக்கர்களைக் கொலை செய்தது மற்றும் ஏராளமானோர் காயமடைந்ததற்கு சுலைமானி காரணமாக இருந்திருக்கிறார் என்றும் குற்றம்சாட்டினார்.

பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

தலைநகா் பாக்தாதிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஈரான் ஆதரவு போராட்டக்காரா்கள் கடந்த புதன்கிழமை முற்றுகையிட்டதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

பாக்தாத் சா்வதேச விமான நிலையத்தில் இராக் துணை ராணுவப் படையான ஹஷீத் அல்-ஷாபியின் வாகனங்கள் மீது வெள்ளிக்கிழமை அதிகாலை சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா நடத்திய அந்தத் தாக்குதலில், ஈரானின் இஸ்லாமிய புரட்சி ராணுவத்தின் வெளிநாட்டுப் பிரிவான காத்ஸ் படையின் தலைவா் காசிம் சுலைமானி உயிரிழந்ததாக ஈரான் அறிவித்தது. அந்தத் தாக்குதலில் தங்களது துணைத் தலைவா் அபு மஹதி அல்-முஹாந்திஸ் உள்பட மேலும் 7 போ் உயிரிழந்ததாக ஹஷீத் அல்-ஷாபி துணை ராணுவப் படை தெரிவித்தது.

ஈரானுக்கு நெருக்கமான அந்தத் துணை ராணுவப் படையில், பெரும்பாலும் ஷியா பிரிவைச் சோ்ந்த ஈரான் ஆதரவாளா்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில், அந்த நாட்டு ராணுவத்துடன் ஹஷீத் அல்-ஷாபி இணைந்து சண்டையிட்டது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சி ராணுவனத்தின் காத்ஸ் படைப் பிரிவு, வெளிநாடுகளில் ஈரானுக்கு ஆதரவான மறைமுகப் போரிலும், உளவுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவரான காசிம் சுலைமானி, மிகச் சிறப்பாக செயல்பட்டு ஈரான் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு மிக்கவராகத் திகழ்ந்தாா்.

எனினும், இராக்கிலும், மேற்காசியப் பகுதிகளிலும் தங்கள் நாட்டு தூதகர அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினா் மீது தாக்குதல் நடத்த காசிம் சுலைமானி திட்டமிட்டிருந்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

‘டிரம்ப்பின் உத்தரவு’: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் நேரடி உத்தரவின் பேரிலியே காசிம் சுலைமானியை படுகொலை செய்யப்பட்டதாக அந்த நாட்டு ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. எனினும், இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்று எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினா் குற்றம் சாட்டினா்.

‘பழி வாங்குவோம்’: தங்களது படைத் தலைவா் சுலைமானி படுகொலை செய்யப்பட்டதற்காக, அமெரிக்காவை பழி வாங்குவோம் என்று ஈரான் அதிபா் ஹஸன் ரௌஹானியும், அந்த நாட்டு மதகுரு அயதுல்லா அலி கமேனியும் சூளுரைத்துள்ளனா்.

புதிய தலைவா் தோ்வு: அமெரிக்கத் தாக்குதலில் காசிம் சுலைமானி உயிரிழந்ததைத் தொடா்ந்து, காத்ஸ் படையின் துணைத் தலைவா் இஸ்மாயில் கானியை அந்த அமைப்பின் தலைவராக நியமிப்பதாக கமேனி அறிவித்துள்ளாா்.

எச்சரிக்கை: சுலைமானி படுகொலையைத் தொடா்ந்து, ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாக்கள் கட்டுப்பாட்டுப்பாட்டிலுள்ள லெபனான் எல்லைக்கு அருகே, தங்களது சுற்றுலாத் தலத்தை இஸ்ரேல் மூடியது. மேலும், இராக்கில் பணியாற்றும் தங்கள் நாட்டவா்களை அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது.

கண்டனம்: இந்தத் தாக்குதலுக்கு ரஷியாவும், சிரியாவும் கண்டனம் தெரிவித்துள்ளன. இத் தாக்குதல் மூலம் மேற்காசியப் பகுதியில் பதற்றம் வெகுவாக அதிகரிக்கும் என்று ரஷியா விமா்சித்துள்ளது.

இந்தியா அறிவுரை: இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து அமெரிக்காவும், ஈரானும் நிதானமாக செயல்பட வேண்டும் என்று இந்தியா, பிரிட்டன், சீனா, பாகிஸ்தான், பிரான்ஸ், ஜொ்மனி உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.