பெய்ஜிங்: சீனாவில் கடுங்குளிர் நிலவி வருவதால் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சீனாவில் கடந்த சில நாள்களாக கடுங்குளிர் நிலவி வருகின்றது. நீர்வீழ்ச்சிகள் உறைந்து பனிக்கட்டியாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய மற்றும் கிழக்கு சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் இன்று முதல் அடுத்த நான்கு நாள்களுக்கு வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு, வடகிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு சீனாவில் சில பகுதிகளில் வெப்பநிலை 12 முதல் 16 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளது.
மேலும், என்.எம்.சியின் கணிப்பின்படி, கிழக்கு மற்றும் தெற்கு சீனாவிற்கு அருகிலுள்ள சில கடல் பகுதிகளிலும் கடுமையான குளிர் நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
கடுங்குளிர் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வேட்டுவம் வெளியீடு எப்போது?
பெட்ரோல் விலை கடுமையாக உயரும்: ராகுல் காந்தி
லுங்கி இங்கிடி நலமுடன் உள்ளார்: ஐபிஎல் நிர்வாகம் தகவல்

மது, சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: ஜிவி பிரகாஷ்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


