பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது காயமடைந்த டெல்லி வீரர் லுங்கி இங்கிடி நலமுடன் இருப்பதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது கேட்ச் பிடிக்க முயன்ற டெல்லி கேபிடல்ஸ் வீரர் லுங்கி இங்கிடியின் தலை தரையில் மோதியது. அவருக்கு தலைவலி மற்றும் கழுத்து வலி இருந்ததால், அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இங்கிடி தற்போது சீராக உள்ளார், விரைவில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் 35ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதிரடியாக ஆடிய அந்த அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் மட்டும் இழந்து 264 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தின்போது பிரியன்ஷ் ஆர்யா அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்ற லுங்கி இங்கிடிக்கு தலையில் அடிபட்டது. பவுண்டரி எல்லை அருகே வந்த கேட்ச்சைப் பிடிக்க பின்னோக்கி ஓடியபோது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் தரையில் அவரது தலை பலமாக மோதியது. இதனால் மைதானத்திலேயே வலியால் அவர் துடித்தார். சம்பவம் நடந்த உடனே டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் மருத்துவக் குழுவினர் மைதானத்திற்குள் விரைந்து வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆட்டமும் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.
பின்னர் மைதானத்திற்குள் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை ஸ்டெச்சர் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
Summary
Delhi Capitals pacer Lungi Ngidi is "stable" and will be "discharged shortly" from a local hospital where he underwent medical examination after he hurt himself during his side's IPL match against Punjab Kings here on Saturday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார்

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

தொடா் தோல்விலியிருந்து மீளும் முனைப்பில் சென்னை: டெல்லியுடன் இன்று மோதல்
ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

