கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

பிலிப்பின்ஸில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவு

பிலிப்பின்ஸின் லூசோன் தீவில் உள்ள படங்காஸ் மாகாணத்தை நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

News image

பிலிப்பின்ஸில் நிலநடுக்கம்

Updated On :25 டிசம்பர் 2020, 7:00 am

பிலிப்பின்ஸின் லூசோன் தீவில் உள்ள படங்காஸ் மாகாணத்தை நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

பிலிப்பின்ஸ் நில அதிர்வு மற்றும் எரிமலை நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, 

இன்று காலை 7.43 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 102 கி.மீ ஆழத்தில், கலடகன் நகரிலிருந்து தென்மேற்கே சுமார் 11 கி.மீ தொலைவில், மணிலாவிலிருந்து 100 கி.மீ தெற்கே தாக்கியுள்ளது. 

மெட்ரோ மணிலா மற்றும் அருகிலுள்ள மாகாணங்களான படங்காஸ், லாகுனா, கேவைட், ரிசால் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் சுனாமியை உருவாக்காது என்று பிவோல்க்ஸ் இயக்குனர் ரெனாடோ சோலிடம் தெரிவித்தார்.

இதுவரை நிலநடுக்கத்தினால் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்று (என்.டி.ஆர்.ஆர்.எம்.சி) செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

பசிபிக் "ரிங் ஆஃப் ஃபயர்" உடன் அமைந்துள்ளதால் பிலிப்பின்ஸில் அடிக்கடி நில அதிர்வு ஏற்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.