காலநிலை மாற்றத்திற்கான அவசர நிலையை அறிவித்தது நியூசிலாந்து
உலக அளவில் பூதாகரமாக மாறி வரும் காலநிலை மாற்ற சிக்கலுக்கான அவசர நிலையை நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்.


உலக அளவில் பூதாகரமாக மாறி வரும் காலநிலை மாற்ற சிக்கலுக்கான அவசர நிலையை நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்.
அதிகரித்துவரும் காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. திடீர் மழைப்பொழிவு, அதிகரிக்கும் புயல்கள், உயரும் வெப்பநிலை போன்றவற்றால் சூழலியலில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில் உலக அளவில் கார்பன் வெளியீட்டு அளவைக் கட்டுப்படுத்த பன்னாட்டு அமைப்புகள் உலக நாடுகளை வலியுறுத்தி வருகின்றன. இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் காலநிலை மாற்றத்திற்கான அவசர நிலையை அறிவித்தார்.
புதன்கிழமை நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின் கீழ் பேசிய ஜெசிந்தா, “காலநிலை மாற்றம் நம் காலத்தின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து 2050ஆம் ஆண்டுக்குள் நியூசிலாந்து பூஜ்ஜிய கார்பன் வெளியீட்டை நோக்கிய இலக்கை அடையும் என அவர் உறுதியளித்தார். மேலும் மின்சார வாகனங்கள் பயன்பாடு, நிலக்கரி பயன்பாடு குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை முடுக்கிவிட உத்தரவிட்டார்.
நியூசிலாந்து உலகளாவிய கார்பன் உமிழ்வில் 0.17% பங்களிக்கிறது. இது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பில் உள்ள 32 நாடுகளில் 17 வது இடத்தில் உள்ளது.நியூசிலாந்தின் கார்பன் உமிழ்வு கடந்த 20 ஆண்டுகளில் 60% உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...