ரஷியாவில் ஒரே நாளில் 4,696 பேருக்கு கரோனா: 120 பேர் பலி
ரஷியாவில் மேலும் 4,696 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


ரஷியாவில் மேலும் 4,696 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ரஷியாவில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, புதிதாக 4,696 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் மொத்த பாதிப்பு 9,66,189 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 120 பேர் உள்பட இதுவரை 16,568 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக தலைநகர் மாஸ்கோவில் (681), செயின்ட் பீட்டர்ஸ்பர்க் (179), மாஸ்கோ பகுதி (143) பேருக்கும் தொற்று பதிவாகியுள்ளது.
மேலும், ஒரேநாளில் 6,652 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். மொத்தம் இதுவரை 7,79,747 பேர் குணமடைந்தனர். உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...