/

இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர் படை இல்லை

பாகிஸ்தானின் மிக பதற்றம் நிறைந்த விமான நிலையமாகக் கருதப்படும் இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் வெடிகுண்டு செயலிழப்புப் படை இல்லை என்று அந்நாட்டு ஊடகங்களில் செய்தி

News image

இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர் படை இல்லை

Updated On :20 ஆகஸ்ட் 2020, 9:55 am

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் மிக பதற்றம் நிறைந்த விமான நிலையமாகக் கருதப்படும் இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் வெடிகுண்டு செயலிழப்புப் படை இல்லை என்று அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்புப் படையினர் இல்லை என்பதை புலனாய்வுத் துறை ஆராய்ந்து, அந்நாட்டுக் காவல்துறைக்கு தகவல் அளித்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுவதாக அந்நாட்டு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

அதில்,"ராவல்பிண்டி, இஸ்லாமாபாத் மற்றும் அட்டோக் போன்ற நகரங்களுக்கு இடையேயான தொலைவு அதிகமாக இருப்பதால், ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால், வெடிகுண்டு கண்டுபிடிப்பு நிபுணர்கள், உரிய நேரத்துக்கு இஸ்லாமாபாத் வருவதற்கு காலதாமதம் ஏற்படும்" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

"ராவல்பிண்டியில் இருந்து வெடிகுண்டு கண்டுபிடிப்புப் படை இஸ்லாமாபாத்தை அடைய ஒரு மணி நேரம் ஆகும் என்றும், இஸ்லாமாபாத் விமான நிலையத்துக்கு என்று ஒரு மோப்ப நாயும் இருக்க வேண்டும்" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.