கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

தோழியைக் காப்பாற்ற முதலையுடன் சண்டையிட்டு அதன் கண்களைத் தோண்டிய சிறுமி.. 

ஸிம்பாப்வேயில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த தனது தோழியை கடித்து இழுத்துச் சென்ற முதலையுடன் சண்டையிட்டு அதன் கண்களைத் தோண்டி தோழியைக் காப்பாற்றிய சிறுமியை உலகமே பாராட்டி வருகிறது.

News image

girl wrestles crocodile

Updated On :30 அக்டோபர் 2019, 10:11 am


ஹராரே: ஸிம்பாப்வேயில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த தனது தோழியை கடித்து இழுத்துச் சென்ற முதலையுடன் சண்டையிட்டு அதன் கண்களைத் தோண்டி தோழியைக் காப்பாற்றிய சிறுமியை உலகமே பாராட்டி வருகிறது.

சின்டிரெல்லா கிராமத்தில் 9 வயது சிறுமி லடோயா முவானி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென ஒரு முதலை அவளை இழுத்துச் சென்றது. அப்போது அவளுடன் குளித்துக் கொண்டிருந்த ரெபேக்கா என்ற சிறுமி, தனது தோழியைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த முதலை மீது தாவி அமர்ந்துள்ளார். 

முதலையுடன் சண்டையிட்டு, அதன் கண்களை கைகளால் தோண்டியிருக்கிறார். அது தனது தோழியை பிடித்து வைத்திருப்பதை விடும் வரை அவர் முதலையை தாக்கியுள்ளார். ஒரு வழியாக வலி தாங்க முடியாத முதலை  லடோயாவை விட்டுவிட்டு வந்த வழியில் ஓடியது.

தோழியைப் பிடித்தபடி ரபேக்கா கரை வந்து சேர்ந்தார். ரபேக்காவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால் லடோயாவுக்கு ஏற்பட்ட காயத்துக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.