தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பெண்கள் இதைப் படிக்க வேண்டாம்.. 61 ஆண்டுகளாக மனைவிக்கு தினம் ஒரு டிரெஸ் வாங்கிக் கொடுக்கும் கணவர்!

அமெரிக்காவின் அரிசோனாவில் வாழும் ஒரு கணவர், தன் மனைவிக்காக ஒரு காரியத்தை செய்து வருகிறார். அதுவும் 61 வருடங்களாக!

News image

அமெரிக்க தம்பதி

Updated On :28 அக்டோபர் 2019, 6:33 am

அமெரிக்காவின் அரிசோனாவில் வாழும் ஒரு கணவர், தன் மனைவிக்காக ஒரு காரியத்தை செய்து வருகிறார். அதுவும் 61 வருடங்களாக!

யெஸ். ஒருமுறை தன் மனைவி உடுத்திய உடையை அடுத்த முறை அணியக் கூடாது என்பதில் இந்தக் கணவர் கண்டிப்பானவர்! இதன் காரணமாக அவரது மனைவி இதுவரை 55 ஆயிரம்... ஆமாம்... 55 ஆயிரம் உடைகளை வாங்கியிருக்கிறார்! பாலுக்கு (Paul ) வயது 83. இவரது மனைவி மார்கட் பிராக்மன் (Margot Brockmann).

 அது 1950களின் தொடக்கம். தங்கள் சொந்த நாடான ஜெர்மனியில் நடைபெற்ற நடன நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் சந்தித்திருக்கிறார்கள். சும்மா ‘ஹாய்’ சொல்லி அன்று இரவு முழுக்க நடனம் ஆடியவர்கள் விடியும்போது காதலர்களாக அந்த அரங்கத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்!

இதன் பிறகான இவர்களது ஒவ்வொரு சந்திப்பின்போதும் மார்கட் பிராக்மனுக்கு புத்தம் புதிய உடைகளைத்தான் பால் பரிசாக வழங்குவாராம்.

தாங்கள் முதன் முதலில் சந்தித்தபோது பால் என்ன உடையை அணிந்திருந்தார் என்பதை மார்கட் பிராக்மன் மறந்துவிட்டார். ஆனால், பால்..? சரியாக அன்று மார்கட் என்ன உடையை அணிந்திருந்தார் என்பதை அதன் நிறம், டிசைனுடன் சொல்கிறார்!  

‘‘அந்த ப்ளூ கலர் டிரெஸ்ல மார்கட் அப்படி இருந்தா... ஏஞ்சல் மாதிரி! இப்ப வரை என் கண் முன்னாலயே அந்த தோற்றம் இருக்கு!’’ கண் சிமிட்டும் பால், ‘‘நாளுக்கு நாள் புதுப் புது ஃபேஷன்ஸ் அறிமுகமாகிக்கிட்டே இருக்கு.

அதுக்கு ஏத்தா மாதிரி மார்கட் காட்சி தர வேண்டாமா..? அதனாலதான் டிரெஸ் வாங்கிக் கொடுத்துக்கிட்டே இருக்கேன்... நான் அவளுக்கு வாங்கித் தர்ற எல்லாமே அந்தந்த சமயத்துல டிரெண்டுல இருந்ததுதான். ஒவ்வொரு வருஷமும் ஒரு செட் டிரெஸ்ஸஸ்ஸை வித்துடுவோம். பேரம் பேசமாட்டோம். கேட்கற விலைக்கு கொடுத்துடுவோம்...’’

மார்கட்டை அணைத்தபடி சொல்லும் பால், இப்போது தாங்கள் அமெரிக்காவில் வசிப்பதாகவும், ஒரு கேரேஜ் முழுக்க மார்கட் ஒரே ஒருநாள் அணிந்த உடைகள் குவிந்திருப்பதாகவும் சொல்கிறார். ‘‘எவ்வளவு சொல்லியும் பால் கேட்க மாட்டார்! ஒருநாள் உடுத்திய டிரெஸ்ஸை இதுவரை நான் மறுநாள் அணிஞ்சதில்ல.

எந்த ஒரு மகாராணியும் இப்படி வாழ்ந்திருக்க மாட்டா... அப்படியொரு வாழ்க்கையை வாழ்ந்துட்டேன்! இப்பதான் பாலை மிரட்டி அவர் டிரெஸ் வாங்கிக் கொடுக்கறதை நிறுத்தியிருக்கேன்.

அப்படியும் ஏதாவது ஒரு சாக்கு வைச்சு டிரெஸ் வாங்கிக் கொடுத்துடறார்...’’ செல்லமாக சிணுங்குகிறார் மார்கட். evolution-vintage.com என்னும் தளத்தில் மார்கட் பிராக்மன் அணிந்த அத்தனை உடைகளும், அதற்கு மேட்ச்சிங்காக அவர் பயன்படுத்திய நகைகள் உட்பட அத்தனை ஆக்ஸசரிஸ்களும் விற்பனைக்கு உள்ளன!

இதைப் படித்து விட்டு பெண்களே.. உங்கள் கணவரிடம் தினமும் புத்தாடை கேட்டு அடம்பிடித்தால் நிச்சயமாக அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.. ஏன் என்றால் முன்னதாகவே சொல்லிவிட்டோம். பெண்கள் இதைப் படிக்க வேண்டாம் என்று..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.