தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சவாரி செய்ய ஏறினால் மயக்கம் வருவதுபோல் நடிக்கும் விவகாரமான குதிரை! வைரலாகும் விடியோ

சவாரி செய்ய யாரேனும் ஏறினால் தனக்கு மயக்கம் வருவதுபோல் நடித்து தரையில் விழுந்து விடுகிறது ஒரு விவகாரமான குதிரை. 

News image

மயக்கம் வருவதுபோல் நடிக்கும் குதிரை

Updated On :23 அக்டோபர் 2019, 10:06 am

சவாரி செய்ய யாரேனும் ஏறினால் தனக்கு மயக்கம் வருவதுபோல் நடித்து தரையில் விழுந்து விடுகிறது ஒரு விவகாரமான குதிரை. 

உயிர்போனால் எப்படி தரையில் படுத்திருக்குமோ, அதே போன்று அந்தக் குதிரை படுத்துக் கொள்கிறது. சவாரி செய்ய வந்தவர் திரும்பிச் சென்றதும் குதிரை துள்ளி எழுந்து விடுகிறது.

இந்த சுட்டிக் குதிரை செய்யும் சேட்டைதான் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மிகக்குறைந்த நேரத்தில் 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றிருக்கிறது விவகாரமான குதிரையின் வீடியோ.

பேஸ்புக்கில் பிராசிஸ்கோ ஜலாசர் ( Frasisco Zalasar)என்பவர் பதிவேற்றம் செய்திருக்கிறார். குதிரைக்கு 'ஜிங்ஜாங்' (Jingang) என்று பெயர் வைத்துள்ளனர். ஒவ்வொரு முறையும் அதன் மீது ஏற வரும்போது மயங்கி விழுந்து விடுகிறது. சில சமயம் தொட்டாலே மயக்கம்போட்டு விழுகிறது ஜிங்ஜாங்.

தரையில் படுத்துக் கொண்டு நாக்கை வெளியே நீட்டி இறந்ததுபோல் நடிக்கும் ஜிங்ஜாங்கின் சேட்டை, படு சுட்டித்தனமாக உள்ளது.

குதிரையின் க்யூட்டான செயல்பாடுகளை நெட்டிசன்கள் கமென்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பாக, நகம் வெட்டுவதை விரும்பாத நாய் ஒன்று, நகவெட்டியை அருகில் கொண்டு சென்றாலே மயக்கம் வருவதுபோல் தரையில் விழுந்தது. இந்த வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.