டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இரண்டாவது முறையாக கனடாவின் பிரதமர் ஆகிறாரா ஜஸ்டின் ட்ரூடோ?

கனடா நாட்டின் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் என கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. 

News image
ஜஸ்டின் ட்ரூடோ
Updated On :31 ஜனவரி 2024, 10:28 am

Muthumari

கனடா நாட்டின் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் என தேர்தலின் முதற்கட்ட முடிவுகளை வைத்து அனைத்தின் பிரபல ஊடகம் கணித்துள்ளது. இதனால் லிபெரல் கட்சியினர்  கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கனடாவின் முன்னாள் பிரதமர் பியர் ட்ரூடோவின் மகன் ஜஸ்டின் ட்ரூடோ முதல்முறையாக கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று அந்நாட்டின் பிரதமர் ஆனார். கனடாவின் இளம் வயது பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ள இவர், அந்நாட்டு மக்களின் நன்மதிப்பையும் பெற்றவர். அதுமட்டுமின்றி, இலங்கை, சிரியா உள்ளிட்ட அந்நிய நாட்டு அகதிகளுக்கு இடமளித்து உலக நாடுகள் மத்தியிலும் பாராட்டைப் பெற்றவர். 

Story image

இந்த நிலையில், ஜஸ்டின் ட்ரூடோவின் பதவிக்காலம் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் சமீபத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில்  ட்ரூடோவின் லிபெரல் கட்சிக்கும், கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது. இதில் கன்சர்வேட்டிவ் கட்சி அதிக இடங்களை வெல்லும் என சில கருத்துக்கணிப்புகள் வெளியாகின. 

ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், பெரும்பான்மையின்றி அதே நேரத்தில் இதர இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ட்ரூடோவின்  லிபெரல் கட்சியே இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் என இறுதிக்கட்ட கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.

Story image

அதாவது, கனடாவின் பிரபலமான சிபிசி என்ற ஊடகம் இந்தக் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 170 இடங்களில் லிபெரல் கட்சி 156 இடங்களைக் கைப்பற்றும் என்றும் அதே நேரத்தில் கான்சர்வேட்டிவ் கட்சியினர் கடந்த முறை 90 இடங்களைப் பெற்ற நிலையில் இந்தத் தேர்தலில் 122 இடங்களைப் பெறும் என்றும்   கணிக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்நாட்டில் உள்ள மற்ற இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ஜஸ்டின் ட்ரூடோ இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளதால் லிபெரல் கட்சியினர் நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்த பின்னரே கனடாவின் அடுத்த பிரதமர் யார் என்பது உறுதியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.