சிலி நாட்டில் மெட்ரோ ரயில் கட்டண உயர்வை கண்டித்து, போராட்டம், வன்முறை வெடித்துள்ளதால், அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.
தென் அமெரிக்க நாடான சிலியில், சான்டியாகோ நகரில், மெட்ரோ ரயில் சேவை நடந்து வருகிறது. இது, 140 கி.மீ., தொலைவுக்கு இயக்கப்படுகிறது. தென் அமெரிக்காவில், மிகப்பெரிய மற்றும் நவீனமான மெட்ரோ ரயில்வே நெட்வொர்க் இது. இந்த ரயில் சேவையை அதிகளவிலான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
சர்வதேச அளவில், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை அடுத்து, மெட்ரோ ரயில் கட்டணத்தை சிலி அரசு அதிகரித்தது. இதற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் வன்முறை, தீ வைப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. 12 மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்கள் தாக்கப்பட்டு, பொருட்கள் சூறையாடப்பட்டன. 16 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இது தொடர்பாக, பலர் கைது செய்யப்பட்டனர்.இதையடுத்து, அதிபர் செபாஸ்டின் பினேரா, அவசர நிலை பிரகடனம் செய்து உத்தரவிட்டார்.
உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு பராமரிப்பை ராணுவம் ஏற்றுக் கொண்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தலைவராக மேஜர் ஜெனரல் ஜாவியர் இட்டுரியாகாவை நியமித்து, அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


