சியால்கோட்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட சியால்கோட்டில் அமைந்திருக்கும் மிகப் பழமையான இந்துக் கோயில் சுமார் 72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டதன்பேரில், பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினமான இந்து சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஷவாலா தீஜா சிங் கோயில் திறக்கப்பட்டுள்ளது.
இந்து முறைப்படி கோயிலில் பரிகாரப் பூஜைகள் செய்யப்பட்டு கோயில் திறக்கப்பட்டதாக தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்துக் கோயிலைத் திறக்க வேண்டும் என்று பல ஆண்டு காலமாக இந்து சமுதாய மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர் என்று வழிபாட்டுத் தலங்களுக்கான துணைச் செயலர் சயீத் பராஸ் அப்பாஸ் கூறினார்.
கோயிலை மறுசீரமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இந்தியாவில் இருந்து இந்து மதக் கடவுள் சிலைகள் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்படும்.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு மூடப்பட்ட இந்த கோயில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உத்தரவின் பேரில் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்புதான், சியால்கோட்டில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான குருத்வாரா கோயிலும், இந்திய சீக்கிய பக்தர்கள் உள்ளே நுழைய அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, இந்த குருத்வாரா கோயிலுக்குள் பாகிஸ்தானியர்கள் மட்டுமே நுழைய முடியும். இந்திய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொல்லாத ஆசைகள்... 29 புதிய பாடல்!

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

