டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி: காவல்துறை தலைவர் புஜித் ஜயசுந்தர ராஜிநாமா 

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, இலங்கை காவல்துறை தலைவர் புஜித் ஜயசுந்தர தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:45 am

DIN

கொழும்பு:  இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, இலங்கை காவல்துறை தலைவர் புஜித் ஜயசுந்தர தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினமான கடந்த ஞாயிறன்று தேவாலயங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 353 பேர் மரணமடைந்தனர். 500-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை போலீசார் இதுவரை 50-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளனர். 18 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.  மேலும் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது

அத்துடன் மறுநாள் முதல் நடைபெற்ற தொடர் சோதனைகளில் இலங்கை  சர்வதேச விமான நிலையம், கொழும்பு மத்திய பேருந்து நிலையம், நுவரெலியா  ஆகிய இடங்களில் வெடிக்காத குண்டுகள் மற்றும் டெட்டனேட்டர்கள்  கண்டெடுக்கப்பட்டுள்ளன    

நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் என்னும் இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புக்கு இந்த சம்பவத்தில் தொடர்புள்ளதாகவும், கடந்த மாதம் நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாகவே, இலங்கை தேவாலயங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ருவான் விஜேவர்தன செவ்வாயன்று தகவல் தெரிவித்துள்ளார். அதேசமயம் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. 

அதையடுத்து தாக்குதல் அபாயம் குறி த்து முன்னரே தாவல் தெரிந்திருந்தும் சூழலை சரிவராக கையாளாத காரணத்தால் இலங்கை ராணுவ செயலர் மற்றும் காவல்துறை தலைவர் ஆகிய இருவரும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் மைத்ரிபால சிறீசேனா அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.

முன்னதாக வியாழனன்று  தற்கொலைப்படைத் தாக்குதல்களில் ஈடுபட்ட ஒன்பது பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் படித்தவர்கள் என்பதும், அவர்களை மூளைச்சலவை செய்து இந்த கொடூர செயலுக்கு பய்னபடுத்தியுள்ளனர் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ருவான் விஜேவர்தன தகவல் தெரிவித்துள்ளார்.    

அதன் தொடர்ச்சியாக இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் ஹேமசிறீ பெர்னாண்டோ வியாழனன்று தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அதிபரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, இலங்கை காவல்துறை தலைவர் புஜித் ஜயசுந்தரவும் தனது பதவியை வெள்ளியன்று ராஜிநாமா செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.