சிங்கப்பூர்: தீபாவளிக்கு வெடி வெடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிங்கப்பூரில் இந்திய வம்சாவழி இளைஞருக்கு மூன்று வாரங்கள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் யிஷுன் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவன் அர்ஜுன் (29). இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவரான இவர் கடந்த ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளியன்று, சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா தீபாவளி பஜார் பகுதியில் இருந்து வாங்கி வந்த பட்டாசுகளை, அதிகாலை 3.30 மணியளவில் தனது குடியிருப்பு பகுதி அருகே வெடித்துள்ளார். சுமார் ஐந்து நிமிடங்களுக்கு வெடிச்சத்தம் நீடித்துள்ளது.
இதையடுத்து முறையான அனுமதி இன்றி பட்டாசுகளை வெடித்ததாகவும், அருகில் இருந்த குடியிருப்புவாசிகளுக்கு ஆபத்து விளைவித்ததாகவும், காவல்துறை அவர் மீது வழக்குப் அதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில் அந்த இளைஞருக்கு மூன்று வாரங்கள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பை வழங்கிய மாவட்ட நீதிபதி இந்த வெடி வெடித்தல் சம்பவமானது பலருக்கு காயங்களையும், தீப்பற்றும் அபாயத்தையும் உருவாக்க கூடியது என்று விமர்சித்துள்ளார்.எனவே இளைஞர் ஜீவன் அர்ஜுனுக்கு மூன்று வாரங்கள் சிறை தண்டனையும், 5000 சிங்கப்பூர் டாலர்கள் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு

கருப்புடன் வெளியாகும் நூறு சாமி?

சூர்யவன்ஷிக்கு ரசிகரான ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ்!
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


