ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழா: மோடிக்கு அழைப்பு விடுத்த இப்ராஹிம் முகமது சோலீ

மாலத்தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவர் இப்ராஹிம் முகமது சோலீ வெற்றி பெற்றார். நவம்பரில் நடைபெறும் அதிபர் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 செப்டம்பர் 2018, 12:00 pm

மாலத்தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவர் இப்ராஹிம் முகமது சோலீ வெற்றி பெற்றார். நவம்பரில் நடைபெறும் அதிபர் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியும், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற சோலீயும் தொலைபேசியில் உரையாடிய போது, அதிபர் பதவியேற்பு விழாவுக்கு வருகை தருமாறு மோடிக்கு சோலீ அழைப்பு விடுத்ததாகக்  அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின் முதல் சுற்றிலேயே முன்னாள் அதிபர் முகமது ரஷீத் வெற்றி பெற்றாலும், அந்தத் தேர்தல் முடிவை உச்ச நீதிமன்றம் செல்லாததாக அறிவித்தது. அதனால் கிடைத்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட அப்துல்லா யாமீன், மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இரண்டாம் சுற்றுத் தேர்தலில் வெற்றி பெற்றது நினைவுகூரத்தக்கது.

மாலத்தீவில் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்தத் தேர்தலில் இரண்டாவது முறையாக அதிபர் முகமது யாமீன் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து, எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் முகமது ரஷீத் போட்டியிடுவதாக இருந்தது. எனினும், யாமீன் அரசு பதிவு செய்துள்ள பல்வேறு வழக்குகளிலிருந்து தப்பி, தற்போது இலங்கையில் தஞ்சமடைந்துள்ள ரஷீத், போட்டியிலிருந்து விலகினார்.

அதையடுத்து, அவருக்கு பதிலாக இப்ராஹிம் முகமது சோலீ தேர்தலில் போட்டியிட்டார்.

இந்த நிலையில், தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட முடிவுகளின்படி, 58.3 சதவீத வாக்குகளைப் பெற்று முகமது சோலீ வெற்றி பெற்றார். அதிபர் யாமீனுக்கு 41.7 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தது.

இதையடுத்து, 7-ஆவது அதிபராக முகமது சோலீ வரும் நவம்பர் மாதம் 17-ஆம் தேதி பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.