பல்வேறு பிரச்னைகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக 15 - 29 வயதுள்ளவர்களே அதிகம் தற்கொலை செய்து கொள்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக தற்கொலைத் தடுப்பு நாளை முன்னிட்டு, உலக சுகாதார அமைப்பும், கனடாவின் மன நல ஆணையமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
வறுமை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில்தான் அதிகளவில் தற்கொலைகள் நிகழ்வதாகவும், 2016ம் ஆண்டு அதிக தற்கொலைகள் நிகழ்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்து கொண்டு உயிரிழக்கும் எண்ணிக்கையைப் போலவே 20 மடங்கு அதிகமானோர் தற்கொலைக்கு முயல்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒருவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தால், சுமார் 20 பேர் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர்.
குடும்பப் பிரச்னை, மன உளைச்சல் என பல்வேறு காரணங்களுக்காக ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுக்கிறார். வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களை அதிகம் கொண்ட நாடுகளில் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்ளும் முறை அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கிறது.
தற்கொலை செய்து கொள்வதில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதைத் தொடர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்வதும், தீக்குளிப்பதும் அதிகம் உள்ளன.
பணக்கார நாடுகளில் நடக்கும் தற்கொலைச் சம்பவங்களுக்கு பெரும்பாலும் மனநல பாதிப்பு அல்லது போதைப் பொருள் பழக்கம் போன்றவை காரணங்களாக அமைகின்றன. அதாவது அந்த நொடியில் ஏற்படும் மன உந்துதலால் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
போதைப் பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது, மக்களின் மன நலனைக் காக்க நடவடிக்கை எடுப்பது போன்றவை தற்கொலைகளைத் தடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெலங்கானா: தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்து

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


