ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

'டிக்  டாக்' இசைச் செயலிக்கு போட்டியாக புதிய செயலியை களமிறக்கும் பேஸ்புக்  

இளைஞர்களின் மனம் கவர்ந்த 'டிக்  டாக்' இசைச் செயலிக்கு போட்டியாக புதிய செயலியை பேஸ்புக் களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

News image
Updated On :26 அக்டோபர் 2018, 1:11 pm

சான் பிரான்சிஸ்கோ: இளைஞர்களின் மனம் கவர்ந்த 'டிக்  டாக்' இசைச் செயலிக்கு போட்டியாக புதிய செயலியை பேஸ்புக் களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

இளைஞர்கள் தங்கள் மனம் கவர்ந்த பாடல்களுக்கு நடனம் ஆடவும் அல்லது பிடித்த பாடல்களுக்கு வாயசைத்து பதிவு செய்து ஒளிபரப்பவும் சில இசைச் செயலிகள்  உள்ளன.அவற்றில் 'ம்யூசிக்கலி' என்னும் செயலி புகழ் பெற்ற ஒன்றாகும். சமீபத்தில் அந்த செயலியை மற்றொரு  இசைச் செயலியான 'டிக்  டாக்' விலை கொடுத்து வாங்கி விட்டது. எனவே அந்த செயலிதான் தற்போது இளைஞர்களின் மனம் கவர்ந்த ஒன்றாக விளங்கி வருகிறது. 

இந்நிலையில் இளைஞர்களின் மனம் கவர்ந்த 'டிக்  டாக்' இசைச் செயலிக்கு போட்டியாக புதிய செயலியை பேஸ்புக் களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

இதுதொடர்பாக 'டெக் க்ரஞ்ச்' என்னும் தொழில்நுட்ப இணையதளத்தில் பேஸ்புக் நிறுவன அதிகாரி ஒருவரின் கூற்றை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள செய்தி பின்வருமாறு:

பேஸ்புக் அறிமுகப்படுத்த உள்ள செயலிக்கு 'லஸ்ஸோ' எனப் பெயரிட உள்ளதாகத் தெரிகிறது. இது அடிப்படையில் ம்யூசிக்கலி / டிக்  டாக் போன்ற ஒன்றாகும். முழு திரையில் இளைஞர்களைக் கவரும் வகையில்,மகிழ்ச்சியூட்டும் அதேநேரத்தில் புதுமைச் சிந்தனைக்கும் இடம் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பிரபலமான பல்வேறு ஆடியோ மற்றும் பாடல்பதிவு நிறுவனங்களுடன் பேஸ்புக் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதால், டிக்  டாக் செயலியில் உள்ள 15 நொடி பாடல்கள் என்ற எல்லையை விட லஸ்ஸோவில் பாடல்களில் கால அளவு அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.    

இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பேஸ்புக் தனது செயலியில் புதிதான சில இசை அம்சங்களை அறிமுகப்படுத்தி இருந்த வியாழன் அன்று இந்த தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.