பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குரலைப் பதிவு செய்யும் உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவியல் தெரிவிக்கிறது. ஆனால், அத்தகைய திறமையும் கருவிகளும் ஆயிரக்கணக்கான வருடங்கள் முன்பே பாரதத்தில் இருந்ததாக புராணங்களும் இதிகாசங்களும் எடுத்துக்காட்டுகின்றன.
குருசேத்திரப் போர் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே நடந்தது. பத்தாம் நாள் போர் முடிவில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் வீழ்த்தப்படுகிறார். அன்றிரவு கிருஷ்ணர் பாண்டவர்களுடன்அவரை தரிசிக்கச் செல்கிறார்.
கிருஷ்ணர் விஷ்ணுவின் அவதாரம் என்ற உண்மையை உணர்ந்தவர் பீஷ்மர். அவர் அன்றிரவு விஷ்ணு சஹஸ்ரநாமம் என்ற விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைக் கொண்ட பாடலை அவர்களுக்கு உச்சரித்துச் சொல்கிறார். அனைவரும் மெய் மறக்கின்றனர்.
அது யுத்த பூமி. ஓலையோ, எழுத்தாணியோ அவர்களிடம் இல்லை. அந்த அற்புத ஸ்லோகத்தை பதிவு செய்யவில்லையே என அவர்கள் வருத்தம் அடைகின்றனர்.
கிருஷ்ணர் அவர்களைத் தேற்றுகிறார். சகாதேவன் அணிந்திருந்த ஸ்படிக மாலையின் ஸ்படிகங்கள் அந்த ஒலி அலைகளை உள் வாங்கியிருக்கும்; எனவே அதனை மறுபடியும் கேட்பது எளிது' என்று அவர்களுக்கு கிருஷ்ணர் மேலும் அறிவுறுத்துகிறார்.
அந்த ஸ்படிகங்களைத் தட்டி ஓசையை எழுப்பி, அவர்கள் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை மீண்டும் கேட்பது எளிதாகிறது.
2018 இல் மேலை நாடுகளில் நடந்த ஆராய்ச்சியில் சில சிலிக்கான், க்வார்ட்ஸ், சஃபையர் போன்ற ஸ்படிகங்கள் ஒலி அலைகளை நீண்ட காலம் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் ஆற்றல் பெற்றவை என நிரூபித்திருக்கிறார்கள்.
அறிவியலுக்கும் ஆன்மிகத்துக்கும் உள்ள தொடர்புதான் என்னே ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கேரளத்தில் கிருஷ்ணர் அசைவ உணவருந்துவதாகச் சித்திரித்து விளம்பரம்: ஹோட்டல் உரிமையாளர்கள் கைது!

கோவையில் பரபரப்பு... ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன் விநியோகித்த திமுக நிர்வாகிகளை பிடித்த அதிமுகவினர்!

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்

ரூ.167 கோடிக்கு விற்கப்பட்ட ரவி வர்மாவின் ஓவியம்..! நவீன இந்திய ஓவியத்தில் புதிய மைல்கல்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

