நைரோபி: கென்யாவின் வடக்குப் பகுதியில் புதனன்று காலை பேருந்து கவிழ்ந்த விபத்தில் 50 பேர் பரிதாபமாக பலியாகினர்.
கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருந்து அந்நாட்டின் வடபகுதியில் விக்டோரியா நதிக்கரையில் அமைந்துள்ள கிசுமு என்ற இடத்திற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த் பேருந்தில் 67 பேர் பயணிக்கக் கூடிய வசதி உள்ளது.
அப்பேருந்தானது கெரிச்சோ மாகாணத்தின் போர்ட் டெர்னான் என்ற இடத்திற்கு அருகே வந்துகொண்டிருந்த பொழுது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி சாலை அருகே இருந்த சிறு பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குளானது.
இந்த விபத்தில் 31 ஆண்கள், 12 பெண்கள் மற்றும் 7 குழந்தைகள் மரணமடைந்தனர். இடிபாடுகளுக்கு இடையே மேலும் சிலர் சிக்கியிருப்பதால் பலி எணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
குறிப்பிட்ட அந்த இடமானது அடிக்கடி இத்தகைய விபத்துகள் நடக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது
இந்தத் தகவலை பிபிசி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
விபத்தில் மரணமடைந்தோரின் குடும்பங்களுக்கு கென்ய அதிபர் உஹுரு கென்யாட்டா ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். அத்துடன் விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதை சாக்கடைப் பணியால் சேதமடைந்த வீடு
மேற்கு வங்கம்: பொது விநியோகத் திட்ட முறைகேடு வழக்கு - அமலாக்கத் துறை 9 இடங்களில் சோதனை

நிதித் துறையில் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்: விழிப்புடன் இருக்க நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பு: நேபாள புதிய அரசுடன் இந்தியா ஆலோசனை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


