பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

இரட்டைப் பேரிடருக்கு உள்ளான இந்தோனேசியா: இறுதிக் கட்டத்தில் மீட்புப் பணிகள்

இரட்டைப் பேரிடருக்கு உள்ளான இந்தோனேசியாவில், இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்போரை மீட்கும் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன.

News image
Updated On :5 அக்டோபர் 2018, 10:22 am


இரட்டைப் பேரிடருக்கு உள்ளான இந்தோனேசியாவில், இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்போரை மீட்கும் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன.

இடிபாடுகளுக்குள் சிக்கி இனி யாரும் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்ற நிலையில், மீட்புப் படையினர் தங்களது மீட்புப் பணியை நிறைவு செய்ய உள்ளனர்.

இந்த நிலையில், இரட்டைப் பேரிடர் தாக்கிய இந்தோனேசியாவில் பலி எண்ணிக்கை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில், நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 1,558 பேர் பலியானதாகவும், 2,549 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கி பலியான 618 பேரின் உடல்கள் ஏற்கனவே மிகப்பெரிய குழி தோண்டி புதைக்கப்பட்ட நிலையில் 921 பேரது உடல்கள் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இடிபாடுகளுக்குள் இன்னமும் 152 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று மீட்புக் குழுவினர் கருதுகிறார்கள்.

பலாரோவில் உள்ள அரசுக் குடியிருப்புப் பகுதியில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூமியில் புதைபட்டிருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது.

சுமார் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் இன்றி தத்தளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.