பீஜிங்: டோக்லாம் பகுதியில் நடப்பு நிலைமையை மாற்றுதல் என்பதே கிடையாது என்று இந்திய தூதரின் கருத்துக்கு சீனா ஆக்ரோஷமாக பதிலளித்துள்ளது.
இந்திய சீன எல்லை பகுதியிலமைத்துள்ள பகுதி டோக்லாம். இப்பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. கடந்த ஆண்டு இப்பகுதியில் சாலை அமைக்கும் சீனாவின் முயற்சிக்கு பூட்டான் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு இந்தியாவும் ஆதரவு தெரிவித்து, சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தியது.
இதைத் தொடர்ந்து டோக்லாம் பகுதியில் இந்திய மற்றும் சீன துருப்புகள் 73 நாட்களாக நேருக்கு நேராக முகாமிட்டு மோதல் போக்கிலிருந்தனர். பின்னர் இரு நாட்டு அதிகாரிகள் கலந்து பேசி நிலைமை சரியானது. சீன துருப்புகள் வாபஸ் பெறப்பட்டன.
இந்நிலையில் டோக்லாம் பகுதியில் நடப்பு நிலைமையை மாற்றுதல் என்பதே கிடையாது என்று இந்திய தூதரின் கருத்துக்கு சீனா ஆக்ரோஷமாக பதிலளித்துள்ளது.
முன்னதாக சீனாவுக்கான இந்தியத் தூதர் கவுதம் பாம்பாவாலே சமீபத்தில் ஹாங்காங்கில் இருந்து வெளிவரும் 'சவுத் சைனா மார்னிங் போஸ்ட்' என்னும் இதழுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
டோக்லாம் பகுதியில் நடப்பு நிலைமையை மாற்ற முயலும் எந்த ஓர் நடவடிக்கையும் மீண்டும் ஒரு மோதலைத்தான் உருவாக்கும். இந்தியா சீனா ஆகிய இரு நாடுகளும் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில், ராணுவ பலத்தினை மேம்படும் பணிகளில் ஈடுபடலாம். ஆனால் டோக்லாம் பகுதியில் நடப்பு நிலைமை பேணப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சன்யிங் பதிலளித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது கூறியதாவது:
எல்லைப் பகுதியினைப் பொறுத்தவரை அங்கு சமாதானம் நிலவ, நிலைத்தன்மை மேம்பட நாங்கள் உறுதி பூண்டிருக்கிறோம். டோக்லாம் எங்களது பகுதி. அதற்கு வரலாறு ரீதியான ஆதாரங்கள் உள்ளன. எனவே அங்கு சீனாவின் செயல்கள் என்பது எங்களது எல்லைக்கு உட்பட்ட ஒன்றுதான். டோக்லாம் பகுதியில் நடப்பு நிலைமையை மாற்றுதல் என்பதே கிடையாது.
கடந்த வருட டோக்லாம் மோதலின் பொழுது எங்களது ஒருங்கிணைந்த நடவடிக்கைகள், தூதரக ரீதியிலான முயற்சிகள் மற்றும் தெளிவான சிந்தனையின் காரணமாக பிரச்னை முடிவுக்கு வந்தது.
இந்த பிரச்னையை பேசசுவார்த்தை மூலம் தீர்ப்பது தொடர்பாக இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து ஆலோசிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம்!

முதலீடு செய்யப் போகிறீர்களா? இந்த 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

தேனியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

நீரைக் கண்ட குழந்தைபோல்.. குதூகலமாக ஆட்டம் போட்ட கோயில் யானை பிரக்ருதி!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


