சான் பிரான்சிஸ்கோ: கூகுள் மேப்கள் வழியாக உபேர் வாடகை வாகனங்களை நேரடியாக 'புக்' செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் ரத்து செய்துள்ளது.
செயலி சார்ந்து வாடகை வாகனங்களை புக் செய்யும் சேவையில் உலகின் பிரபலமான நிறுவனங்களிலொன்று உபேர். ஆனால் கூகிளின் மேப் சேவையை பயன்படுத்துபவர்கள் 'உபேர்' நிறுவன அதிகாரப்பூர்வ செயலியை பயன்படுத்தாமல், கூகிளின் மேப் வழியாகவே வாகனங்களை புக்செய்யும் வசதியானது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறையில் உள்ளது.
அதன்படி கூகிளின் மேப் வழியாக நீங்களே நீங்கள் செல்ல வேண்டிய இடம் மற்றும் வழி ஆகியவற்றை முடிவு செய்த பின்னர், உபேர் நிறுவன கட்டண விபரங்களை மேப் செயலியில் இருந்த படியே தெரிந்து கொண்டு வாகனத்தினை புக் செய்து கொள்ளலாம்.
ஆனால் கூகுள் மேப்கள் வழியாக உபேர் வாடகை வாகனங்களை நேரடியாக 'புக்' செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் தற்பொழுது ரத்து செய்துள்ளது.
திங்கள் முதல் அந்த சேவையினை பயன்படுத்த விரும்பியவர்களுக்கு, "இனி உபேர் பயணங்களை கூகுள் மேப்கள் வழியாக புக் செய்ய இயலாது" என்ற செய்தி மட்டும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு என்ன காரணமா என்று தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக இந்த வசதியானது ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்திற்கு முன்பாவாகவே ஆப்பிளின் ஐஓஎஸ் இயங்குதளத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தற்கொலை எண்ணத்தில் இருந்தேன்: ரத்னகுமார்

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சு!
லெனின் பாண்டியன் படத்தின் முதல் பாடல் எப்போது?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


