இயக்குநர் ரத்னகுமார் மேயாத மான் குறித்து பேசியுள்ளார்.
மேயாத மான், குலு குலு போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாக அறியப்படுபவர் இயக்குநர் ரத்னகுமார்.
இவர், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், லியோ, விக்ரம் போன்ற திரைப்படங்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதி கூடுதலாக கவனிக்கப்பட்டார்.
தற்போது, கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் 29 என்கிற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் மே 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ரத்னகுமார், “மேயாத மான் திரைப்படத்தை என் சகோதரருடன் தயாரிக்கலாம் என முடிவு செய்திருந்தேன். ஆனால், ஒரு தயாரிப்பாளர் கிடைத்தார். முதலில் இக்கதையில் நடிகர்கள் ஜெய் மற்றும் சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அப்போதுதான், பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது.
அந்த தயாரிப்பாளர் ஒப்பந்தத்தைக் கிழித்துவிட்டு, பழைய பணத்தை புதியதாக மாற்ற வேண்டுமென படத்திலிருந்து விலகினார். அந்த நேரத்தில் எனக்கு தற்கொலை எண்ணம் இருந்தது. சபரிமலைக்கு மாலை போட்டு சென்றேன். அடுத்த 2 மாதத்தில் மேயாத மானைத் தயாரிக்க கார்த்திக் சுப்புராஜ் முன்வந்ததும் படம் துவங்கியது” எனக் கூறியுள்ளார்.
Director Rathnakumar has spoken about Meyaadha Maan and his suicide thoughts
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சீமானால், பாலா முன் அழுத இயக்குநர் பாலு மகேந்திரா!
அன்று அனிருத் செய்த உதவி... கண்கலங்கிய விக்னேஷ் சிவன்!

அஜித் - ஷாலினியால் உருவான ஹாய்!
தாயைத் தெய்வமாக அல்ல, மனுஷியாக பாருங்கள்: இயக்குநர் சசி
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை



