டொராண்டோ: கனடாவின் டொராண்டோ நகரில் உணவகம் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உட்பட ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.
கனடாவின் டொராண்டோ நகருக்கு அருகில் அமைந்துள்ள பகுதி கிரீக்டவுன். இங்குள்ள டான்போர்த் அவன்யூ என்ற இடத்தில் புகழ்பெற்ற உணவகம் ஒன்று உள்ளது. இந்த உணவகத்தில் ஞாயிறு இரவு 10 மணி அளவில் கருப்பு உடை அணிந்த மர்ம நபர் ஒருவன் உள்ளே புகுந்தான். அவன் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் 15 ரவுண்டுகள் வரை கண்மூடித்தனமாக சுட்டான். இதில் அங்கே இருந்தவர்களில் சிறுமி உட்பட 9 பேர் காயமடைந்தனர்.
தகவல் கேட்டு விரைந்து வந்த போலீசார் மர்ம நபரை சுட்டு வீழ்த்தினர். அத்துடன் இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த அனைவரும் அருகில் இருந்த மருத்துவமனைகளில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வேட்டுவம் வெளியீடு எப்போது?
பெட்ரோல் விலை கடுமையாக உயரும்: ராகுல் காந்தி
லுங்கி இங்கிடி நலமுடன் உள்ளார்: ஐபிஎல் நிர்வாகம் தகவல்

மது, சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: ஜிவி பிரகாஷ்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


