முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

காபுல் வெடிகுண்டுத் தாக்குதல்: 17 பேர் சாவு, 110 பேர் படுகாயம்

காபுல் நகரில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:05 pm

Raghavendran

ஆஃப்கானிஸ்தானில் உள்ள காபுல் நகரில் சனிக்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காபுலில் உள்ள பழைய அமைச்சர்கள் உள் அரங்கின் வெளிப்பகுதியில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கிருந்த ஆம்புலன்ஸ் மூலமாக இந்த தாக்குதல் சம்பவத்தை பயங்கரவாதிகள் அரங்கேற்றியுள்ளனர்.

இதனால் அங்கிருந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 110 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதையடுத்து அங்கு உடனடியாக விரைந்த மீட்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.