பாங்காங்கின் தலைநகரான தாய்லாந்தின் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிகிச்சைப் பெற்று வந்த, பெளத்த துறவி லூங் பொர் பியான், தனது 92-வது வயதில் உடல் நலக் குறைவு காரணமாக 16-ம் தேதி இயற்கை எய்தினார்.

கம்போடியாவைச் சேர்ந்த துறவி பியான், மத்திய தாய் மாகாணமான லோப்புரியில் பெளத்த குருவாக தனது வாழ்நாளில் பெரும்பகுதியை துறவறத்திலும் சேவையிலும் கழித்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அனைவரின் மதிப்பிற்கும் அன்புக்கும் உரியவராகத் திகழ்ந்தார். உடல் நலிவுற்று இயற்கை எய்திய பின் அவரது உடல் லோப்புரியிலுள்ள புத்த மடாலாயத்திற்கு அனுப்பப்பட்டது.

அவர் சேவையாற்றிய அந்த மடாலயத்திலியேயே அவரது உடல் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. அவரது சீடர்கள் அண்மையில் சவப்பெட்டியில் இருந்து உடலை அகற்றிய போது, அவரது உடல் எவ்வித அழிவுக்கும் சிதைவுக்கும் உட்படாத நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் ஆச்சரியமான விஷயமாக துறவி பியான் இறந்து பல வாரங்கள் கடந்த நிலையிலும் அதே புன்னகையுடன் தோன்றினார். ஆச்சரியம் மிகுந்த இந்த நம்ப முடியாத தருணத்தை புகைப்படம் எடுத்து, சமூக ஊடகங்களுக்கு பகிர்ந்தனர் அவரது சிஷ்யர்களான துறவிகள்.

புதிய, சுத்தமான சவப்பெட்டிக்கு மாற்றுவதற்காக மற்றத் துறவிகள் மூத்த துறவியின் உடலை அகற்றவே அதனை திறந்திருக்கிறார்கள். அப்போது பழைய சவப்பெட்டியில் காணப்பட்ட அவரது உடல் 36 மணி நேரத்திற்கு முன்பு இறந்த ஒருவரின் உடல் போலத்தான் இருந்திருக்கிறது.

பியானின் அமைதியான புன்னகையுடன் கூடிய முகத்தைப் பார்த்ததும் அவர் பெளத்த மதத்தில் போதிக்கப்படும் நிர்வாண நிலையை அடைந்து விட்டதன் அடையாளம் அது என வியந்தனர் சீடர்கள். அவரது இறப்பின் 100-வது நாளில் இறுதி அஞ்சலி விழா நடைபெறும்வரை, துறவியின் சீடர்கள் அவருக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்வார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


