கலிபோர்னியா: பிரபல சமூக வலைதள செயலியான இன்ஸ்ட்டாகிராமிலும் வாய்ஸ் மெசேஜ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை பகிர உதவும் சமூக வலைதள செயலியான இன்ஸ்ட்டாகிராம் பிரபலமான ஒன்றாகும். இதுவரை வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளில் மட்டுமே செய்திகளை ஆடியோவாக பரிமாறிக் கொள்ளும் வசதி இருந்து வந்தது.
இந்நிலையில் இன்ஸ்ட்டாகிராமிலும் வாய்ஸ் மெசேஜ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக 'பாஸ்ட் கம்பெனி' இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இன்ஸ்ட்டாகிராம் செயலியில் தற்போது புதிதாக ஒரு மைக்ரோபோன் பட்டன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டனை அழுத்திப் பிடித்துக் கொண்டிருப்பதன் மூலமாக நீங்கள் விரும்பும் தகவலை ஆடியோவாக பதிவு செய்யலாம்.
வாட்ஸ் அப்பை பொறுத்த வரை ஆடியோவை பதிவு செய்வதற்கு முன்பு யாருக்கு அனுப்ப வேண்டும் என்பதைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். ஆனால் இன்ஸ்ட்டாகிராமின் புதிய வசதியில் முதலில் ஆடியோவை பதிவு செய்த பின்பு, தனிநபருக்கோ அல்லது குழுவையோ தேர்வு செய்து அனுப்பும் வசதி உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு

அஸ்ஸாமில் மினி பேருந்து - லாரி மோதிக்கொண்டதில் பிரபல பிஹு நடனக் கலைஞர் பலி, 11 பேர் காயம்

தவறான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆம் ஆத்மி: ராகவ் சத்தா

கன்னக்குழியா பாடல்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


