தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சீன தலைநகர் பெய்ஜிங்கில் உலக தத்துவ காங்கிரஸ் மாநாடு!

உலக தத்துவ காங்கிரஸ் மாநாடு திங்கள்கிழமை சீன தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கியது.

Updated On :15 ஆகஸ்ட் 2018, 3:05 am

உலக தத்துவ காங்கிரஸ் மாநாடு திங்கள்கிழமை சீன தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கியது. 

உலக தத்துவ காங்கிரஸ் மாநாடு முதன்முதலில் 1900-ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்றது. உலகம் முழுவதிலும் மிகப்பெரிய தத்துவ நிகழ்வுகளில் ஒன்றாக இது திகழ்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்நிகழ்வு பெய்ஜிங்கில் நடப்பது இதுவே முதல் முறை. 

இம்மாநாட்டில் "மனிதனாக கற்றுக் கொள்ளுதல்" என்ற பொருளிலில் சொற்பொழிவுகள், விரிவுரைகள் மற்றும் சுற்றுச்சூழல்கள் போன்ற 100-க்கும் அதிகமான கருத்தரங்குகள் நடைபெற உள்ளன. 121 நாடுகளிலும், பிராந்தியங்களிலிலுமிருந்து 6,000-க்கும் மேற்பட்ட தத்துவ மேதைகள் மற்றும் கல்வியாளர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். 

இந்நிகழ்வில் பல்வேறு கலந்துரையாடல்கள் மூலம்  தத்துவ எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதோடு, உலக நாகரிகம் மற்றும் எதிர்காலத்தில் மனிதர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசப்பட உள்ளது. மேலும் சீன தத்துவத்திற்கும் உலகின் பிற பாகங்களிலிருக்கும் தத்துவங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கும், ஒருமித்த கருத்தைத் தேடுவதற்கும், சீனாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் இடையிலான இடைவெளியை நீக்குவதற்கும் இந்த உலக தத்துவ காங்கிரஸ் மாநாடு - 2018 உதவும் என்று சீன அமைப்புக் குழுவின் தலைவர் லின் ஜியானுவா நம்பிக்கை தெரிவித்தார்.

தத்துவ சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பு மற்றும் பீக்கிங் பல்கலைக்கழகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு இம்மாதம் 20-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.