தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியுள்ளார்.
அஸ்ஸாமில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் குறித்து செய்தியாளர்களுடன் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா பேசுகையில், "வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைத் திறம்பட நடத்தியதற்காக ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட வேண்டும்.
அஸ்ஸாமில் பாஜக 100 இடங்களையும், மேற்கு வங்கத்தில் 200 இடங்களையும் பிடிக்கும்.
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்தவுடன், பாஜக வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்டப்படும்" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், ஹிமந்த பிஸ்வா சர்மாவின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி, "நல்ல வேளை, கடவுளுக்கு நன்றி. அவர் (ஹிமந்த பிஸ்வா சர்மா) சனி கிரகத்திலும் வெற்றி பெறுவார்கள் என்று கூறவில்லை.
தற்போதைய தேர்தல் ஆணையம், தேர்தல் ஆணையமாக இல்லை என்பதே உண்மை. அது இப்போது பாஜக - தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஒரு துறையாக இருக்கிறது" என்று கூறினார்.
Summary
CEC Gyanesh Kumar Should be Given Bharat Ratna, Assam CM Himanta Biswa Sarma
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவிநீக்க புதிய தீர்மான நோட்டீஸ்? எதிர்க்கட்சிகள் ஆயத்தம்!

தமிழகத் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை!
தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கும் தீர்மானத்தில் 200 எம்பிக்கள் கையெழுத்து!
தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படாது: தலைமைத் தேர்தல் ஆணையர்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


