பீஜிங்: உலகின் மிகப்பெரிய கொசு வகை ஒன்றினை சீனாவில் உள்ள பூச்சியியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சீனாவின் மேற்குப் பகுதியில் மிகப் பெரிய பூச்சிகள் அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது. இதன் பொறுப்பாளராக இருப்பவர் ஷாவ் லி. இந்த அருங்காட்சியத்தின் பூச்சியியல் விஞ்ஞானிகள்தான் 11.15 செ.மீ நீள இறக்கை அளவு கொண்ட அந்த பிரமாண்ட கொசுவினைக் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக ஷாவ் லி சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
இந்த பிரமாண்ட கொசுவானது ஹோலோருசியா மிகாடோ குடும்பத்தினைச் சேர்ந்ததாகும். சிச்சுவான் மாகாணத்தின் செங்டூ பகுதியில் உள்ள குய்ன்செங் மலைப் பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆய்வுப் பயணம் ஒன்றின் பொழுது இது கண்டறியப்பட்டது.
இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த பூச்சியியல் ஆராய்ச்சியாளரான ஜான் வெஸ்ட்வுட் முதன்முதலாக ஜப்பானில் ஹோலோருசியா மிகாடோ குடும்ப கொசுக்களைக் கண்டறிந்தார். பொதுவாக இவ்வகை கொசுக்களின் இறக்கை 8 செ.மீ நீளம் வரை வளரும் தன்மை கொண்டது
இவ்வகை கொசுக்கள் பார்க்க அச்சமூட்டும் வகையில் அமைந்திருந்தாலும், இவை மனிதனின் ரத்தத்தினை குடிப்பதில்லை. நன்றாக வளர்ந்த இவ்வகை கொசுக்கள் சிலநாட்கள் மட்டுமே உயிர் வாழும். குறிப்பாக தேனை மட்டுமே குடித்து உயிர் வாழும்.
இவ்வகை கொசுக்களின் அதிக எடை காரணமாக இவை அதிகமாக பறக்காது. அப்படியே பறந்தாலும் அது ஏதோ தாவுவது போல இருக்கும். இவை பெரும்பாலும் அடர்ந்த வனப்பகுதிகளில் காணப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!

அயோத்தி இயக்குநர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி!

தில்லியில் பெண் வழக்கறிஞருக்கு கத்திக்குத்து: கணவர் தலைமறைவு
மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


