டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இந்தியாவில் நேர்மையான தேர்தல் நடப்பதை உறுதி செய்வோம்: மார்க் ஸக்கர்பர்க் 

இந்தியா மற்றும் இதர நாடுகளில் நடைபெறும் தேர்தல்கள் நேர்மையான முறையில் நடப்பதை, பேஸ்புக் நிறுவனம் உறுதி செய்யும் என்று மார்க் ஸக்கர்பர்க் கூறியுள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:43 pm

ANI


வாஷிங்டன்: இந்தியா மற்றும் இதர நாடுகளில் நடைபெறும் தேர்தல்கள் நேர்மையான முறையில் நடப்பதை, பேஸ்புக் நிறுவனம் உறுதி செய்யும் என்று மார்க் ஸக்கர்பர்க் கூறியுள்ளார்.

பயனாளர்களின் தகவல்கள் கசிந்த விவகாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த பேஸ்புக் நிறுவனர் ஸக்கர்பர்க் இதனைத் தெரிவித்தார்.

கேம்பிரிட்ஜ் அனலிடிகா முறைகேடு விவகாரம் குறித்து அமெரிக்க நாடாளுமன்றக் குழுவிடம் முகநூல் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் நேற்று நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டார். 

கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் தனது வலைதளத்தில் ஊடுருவி, பயனாளர்களின் ரகசியத் தகவல்களைத் திருடியதைத் தடுப்பதற்கான போதிய முன்னேற்பாடுகளை செய்யத் தவறியதற்காக தாம் வருந்துவதாக அவர் கூறினார்.

மேலம், 2018ம் ஆண்டு உலக நாடுகள் அனைத்துக்குமே மிக முக்கியமான ஆண்டாகும். இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. அல்லது ஆயத்தப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே, இந்த அனைத்து தேர்தல்களும் நேர்மையான முறையில் நடைபெறுவதை நாங்கள் நிச்சயம் உறுதி செய்வோம் என்று ஸக்கர்பெர்க் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், டிரம்பின் பிரசார நடவடிக்கைகளை, பிரிட்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்ற நிறுவனம் மேற்கொண்டது.

 அந்த நிறுவனம், முகநூல் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட விவரங்களைத் திருடி, அதன் மூலமாக, அவர்களின் விருப்பு, வெறுப்புகளை அறிந்து கொண்டு, அவற்றை டிரம்புக்குச் சாதகமாக தேர்தலில் பயன்படுத்திக் கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அலெக்ஸாண்டர் கோகன் என்ற ஆய்வாளர் உருவாக்கிக் கொடுத்த "செயலி' (ஆப்) மூலமாக, 5 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்களை அந்த நிறுவனம் திருடி, தேர்தலில் பயன்படுத்திக் கொண்டது தற்போது அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரம், சர்வதேச அளவில் கடந்த 2 தினங்களாகப் பரபரப்பாகப் பேசப்படுகிறது. முகநூலில் நம்பகத்தன்மை குறித்து பயன்பாட்டாளர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், முகநூல் சமூக வலைப்பக்கத்தில் இருந்து தகவல்கள் திருடப்பட்டதற்கு மார்க் ஸக்கர்பர்க் முகநூல் பயன்பாட்டாளர்களிடம் மன்னிப்பு கோரினார். "நான் போதிய அனுபவமின்றி மிகச்சிறியவனாக இருந்தபோது, முகநூல் சமூக வலைதளத்தைத் தொடங்கினேன். இதனால், தொழில்நுட்ப ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் தவறுகளை செய்திருக்கிறேன். தவறான நபர்களை நம்பினேன்; தவறானவர்களை பணிக்கு அமர்த்தினேன்.
 இந்த நிலையில்தான், முகநூல் பக்கத்தில் இருந்து பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. முகநூல் வலைதளத்தில் நிகழ்ந்த தவறுக்கு நானே பொறுப்பேற்கிறேன். முகநூல் வலைதளத்தில் இருந்து தகவல்களைத் திருடுவதற்குப் பயன்படுத்தப்படும் செயலிகளை ஆராய்ந்து வருகிறோம். அவற்றில், சந்தேகப்படும்படியான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால், அவற்றைத் தடுப்பதற்கு உரிய வழிமுறைகள் கையாளப்படும்.

கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தை நம்பியிருந்திருக்கக் கூடாது. அந்தத் தவறை மீண்டும் செய்ய மாட்டேன். இது முகநூல், கேம்பிரிட்ஜ் அனலிடிகா, அலெக்ஸாண்டர் கோகன் ஆகிய மூன்று தரப்புக்கும் இடையே நடந்த நம்பிக்கை மீறலாகும்.

அதுமட்டுமன்றி, முகநூல் நிறுவனத்துக்கும், பயன்பாட்டாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த நம்பிக்கை மீறலாகும். எனவே, முகநூல் பக்கத்தில் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கும் வகையில், அடுத்த சில நாள்களில் பல மாற்றங்கள் செய்யப்படும்" என்று கூறியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.