தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள்!

மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படுவது தொடர்பாக...

News image

வாக்கு எண்ணிக்கை - கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 5:28 am

மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படுகின்றன.

மதுரை மாவட்டத்தில் மேலூா், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை மேற்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தியம், உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி), திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் மொத்தம் 3,079 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற வாக்குப்பதிவில் மதுரை மாவட்டம் 80.52 விழுக்காட்டை பதிவு செய்துள்ளது. மதுரை மத்தியில் 73.88%, மதுரை கிழக்கில் 79.90%, மதுரை வடக்கில் 72.63%, மதுரை தெற்கில் 78.19%, மதுரை மேற்கில் 77.77%, மேலூரில் 82.22%, சோழவந்தானில் 87.23% , திருமங்கலத்தில் 87.03%, திருப்பரங்குன்றத்தில் 81.41%, உசிலம்பட்டியில் 82.95% என வாக்குகள் பதிவாகியுள்ளன. மிக அதிகபட்சமாக சோழவந்தான் சட்டமன்ற தொகுதியிலும் (87.23%), குறைவாக மதுரை வடக்கிலும் (72.63%) வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், தோ்தல் நாளன்று வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவிற்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்களித்ததை உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டுக் கருவிகள் ஆகியவற்றை பாதுகாப்பாக பூட்டி சீல் வைக்கப்படும்.

இதனிடையே, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சம்மந்தப்பட்ட தொகுதிகளுக்கு மதுரா கல்லூரி மற்றும் தியாகராசர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்படுவதையும், உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சம்மந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள காப்பறையில் வைக்கப்பட்டு வரும் பணிகளை மதுரை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பிரவீன் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் வருகின்ற மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை 5 மையங்களில் நடைபெற உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு மூன்று இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக இரண்டு இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலூர் மற்றும் மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை ஒத்தக்கடை வேளாண்மை கல்லூரி, சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மதுரை அண்ணா பல்கலைக்கழக வளாகம், மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராசர் பொறியியல் கல்லூரி, மதுரை மத்தி மற்றும் மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மதுரை கல்லூரி, திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மதுரை மாவட்டம் கப்பலூரில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரி வளாகத்திலும் நடைபெற உள்ளன.

Summary

Regarding the establishment of vote-counting centers for the Assembly elections at five locations in the Madurai district...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.