“என் மகன் என் உயரத்தில் பாதி இருப்பான். மூன்று வயதுக்குழந்தைக் தான், எனினும் நல்ல வளர்ச்சி என்பதால் அவனை மடியில் வைத்துக் கொண்டு 3 மணி நேரம் விமானத்தில் அசெளகர்யமாகப் பயணித்தது எனக்கும் சரி, அவனுக்கும் சரி நிம்மதியாக இல்லை. இதே விமான நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு ;இதே மாதிரியான போர்டிங் குழப்பங்களினால் பயணி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தரையில் தள்ளி இழுத்து விமானத்தில் இருந்து வெளியேற்றிய காட்சி ஒன்றை நான் முன்பே செய்திகளில் கண்டிருந்தமையால், என் விசயத்தில் விமான நிறுவனம் செய்த குளறுபடிக்காக கோபம் கொண்டு என்னால் எதிர்த்துக் கேள்வி கேட்க இயலாத அளவுக்கு எனக்கு அச்சமாக இருந்தது. ஆனாலும் முழுத்தொகை செலுத்தி டிக்கெட் வாங்கிய என் மகனது இருக்கையை புதிதாக வந்த பயணிக்கு அளித்ததை என்னால் மன்னிக்க முடியவில்லை. இது முழுக்க, முழுக்க விமான நிறுவனத்தின் தவறு. ஆனால் தண்டனை எனக்கும், என் மகனுக்கும் கிடைத்தது. ”