ஈரான் தலைநகரில் நிலநடுக்கம்: ஒருவர் பலி, 56 பேர் படுகாயம்
ஈரான் தலைநகரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக ஒருவர் உயிரிழந்தார்.


ஈரான் தலைநகர் தெஹ்ரானில் புதன்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டேர் அளவில் 4.2-ஆகப் பதிவானது.
இதன்காரணமாக வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறத் தொடங்கினர்.
இச்சம்பவத்தை அடுத்து அங்கு விரைந்த மீட்புப் படையினர் துரிதமாக செயல்பட்டு பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இருப்பினும் இந்த கோர சம்பவத்தில் சிக்கி இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 56 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்த பின்னர் வீடு திரும்பினர்.
முன்னதாக டிசம்பர் 13-ந் தேதி ஈரானின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் 6.1 ரிக்டேர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்படித்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...