சான் ப்ரான்ஸிஸ்கோ: துவங்கப்பட்ட பதிமூன்று ஆண்டுகளில் பிரபல காணொளிப் பகிர்வு தளமான 'யூ ட்யூப்' முதன்முறையாக தன்னுடைய லோகோ வடிவமைப்பை மாற்றியுள்ளது.
பிரபல தேடுபொறி தளமான கூகிளின் உப பிரிவுகளில் ஒன்றாக, காணொளிப் பகிர்வுக்கான தளமாக 2004-ஆம் ஆண்டு 'யூ ட்யூப்' இணைய உலகில் அறிமுகமானது. அது முதல் உலகமெங்கும் காணொளிப் பகிர்வு மற்றும் தரவிறக்கம் ஆகிய சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமாக 'யூ ட்யூப்' திகழ்கிறது.
இப்பொழுது தனி நபர்கள் முதல் பிரபல நிறுவனங்கள் வரை தங்களுக்கென தனி 'யூ ட்யூப்' அலைவரிசைகளை வைத்துள்ளனர். அதன் மூலம் பெரும் புகழ் பெற்றவர்களும் உண்டு.
இந்நிலையில் ஆரம்பம் முதல் தனக்கென இருந்த வந்த லோகோவை 'யூ ட்யூப்' நிறுவனம் முதன்முறையாக தற்பொழுது மாற்றியுள்ளது முன்னதாக 'யூ ட்யூப்' என்ற ஆங்கில வார்த்தையில் 'ட்யூப்' என்பது மட்டும் சிவப்பு பின்னணியில் வெள்ளை எழுத்துக்களிலும், யூ கருப்பு எழுத்திலும் இருக்குமாறு அதன் லோகோ காட்சியளித்தது.

தற்பொழுது அந்த சிவப்பு பின்னணி நீக்கப்பட்டு 'யூ ட்யூப்' என்னும் முழு வார்த்தையும் கருப்பு எழுத்துகளில் காட்சியளிக்கிறது. அதே நேரம் யூ ட்யூப்பின் பிரபலமான 'ப்ளே' பட்டன் சிவப்பு பின்னணியில் வார்த்தைகளுக்கு இடது பக்கத்தில் இடம் பிடித்துள்ளது.
இது தொடர்பாக கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த மாற்றமானது வெவேறு விதமான கருவிகளில், சிறிய திரைகளில் கூட யூ ட்யூப் லோகோ சிறப்பாக செயல்பட உதவும் என்று தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமியின் 7 மாத கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி

கிழக்கு இந்தியா முழுவதும் அடுத்த மாதம் பாஜக அரசுகள் - அமித் ஷா

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

உதயநிதிக்கு எதிரான வழக்கு: வருமான வரித்துறை பதில் மனு தாக்கல்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


