நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

அமெரிக்காவின் முதல் இஸ்லாமிய பெண் நீதிபதி மரணம்: ஆற்றில் சடலமாக மீட்பு

நியூ யார்க் மாகாண உயர் நீதிமன்றத்தின் உதவி நீதிபதியாக பணியாற்றி வந்த, அமெரிக்காவின் முதல் இஸ்லாமிய பெண் நீதிபதி ஷெய்லா அப்துஸ்-சலாம் ஹூட்சன் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

News image
Updated On :13 ஏப்ரல் 2017, 9:14 am


நியூ யார்க்: நியூ யார்க் மாகாண உயர் நீதிமன்றத்தின் உதவி நீதிபதியாக பணியாற்றி வந்த, அமெரிக்காவின் முதல் இஸ்லாமிய பெண் நீதிபதி ஷெய்லா அப்துஸ்-சலாம் ஹூட்சன் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

நியூ யார்க் காவல்துறையின் துறைமுகப் பிரிவு காவல்துறையினர், மான்ஹட்டன் அருகே, ஹூட்சன் ஆற்றில் மிதந்து கொண்டிருந்த ஷெய்லாவின் உடலை கண்டெடுத்தனர்.

65 வயதான ஷெய்லா, ஆற்றில் இருந்து மீட்கப்பட்டதும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவரது உடலை, கணவர் அடையாளம் காட்டினார்.

ஹர்லேம் பகுதியில் வசித்து வந்த ஷெய்லா, தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா அல்லது விபத்தில் சிக்கினாரா என்பது குறித்து தகவல்கள் இல்லை. அவரது உடலில் எந்த காயமும் இல்லை. மரணம் குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்ற பிறகே முடிவு செய்ய முடியும்  என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

கடந்த 2013ம் ஆண்டு முதல் ஷெய்லா நீதிபதியாக பணியாற்றி வந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.