துபாயில் இருந்து ரஷ்யா வந்த விமானம், ரஷ்யாவின் ரோஸ்டவ்-ஆன் நகரில் தரையிறங்கும் போது மோசமான வானிலை காரணமாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பலியான 62 பயணிகளில் 2 இந்தியர்களும் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய அதிகாரிகள் வெளியிட்ட பட்டியலில், அஞ்சு கதிர்வேல் ஐயப்பன் மற்றும் மோகன் ஷ்யாம் என்ற இந்தியர்களின் பெயர்களும் இடம்பெற்றிருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியுள்ளார்.
இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p align="justify">ரோஸ்டவ்-ஆன் நகரில் உள்ள டான் விமான நிலையத்தில் போயிங் 737-800 ரகத்தை சேர்ந்த அந்த ஜெட் விமானம், தரையிறங்கும் போது 50-100 மீட்டர் உயரத்தில் இருந்து (164-328 அடி) விழுந்து நொறுங்கியுள்ளது. விமானத்தில் பயணம் செய்த விமான ஊழியர்கள், பயணிகள் உள்ளிட்ட 62 பேர் உயிரிழந்தனர்.</p><p align="justify">விமானம் முதல் முறையாக தரையிறங்க முயற்சித்தபோது, கடுமையான பனிமூட்டத்தால் ஓடுபாதை தெளிவாக தெரியவில்லை. எனவே, அந்த முயற்சி கைவிடப்பட்டது. இரண்டாவது முறையாக தரையிறங்க முயற்சித்தபோதும் இதேநிலை நீடித்து, மோசமான வானிலை காரணமாக, ஓடுபாதையைவிட்டு சுமார் 100 அடிதூரம் விலகி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.</p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமியின் 7 மாத கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி

கிழக்கு இந்தியா முழுவதும் அடுத்த மாதம் பாஜக அரசுகள் - அமித் ஷா

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

உதயநிதிக்கு எதிரான வழக்கு: வருமான வரித்துறை பதில் மனு தாக்கல்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


