இராக்கில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட டேங்கர் லாரியைக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் உள்பட 51 பேர் பலியாகினர்.
தலைநகர் பாக்தாதுக்கு தெற்கே உள்ள ஹில்லா நகர எல்லையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
சோதனைச் சாவடியைக் குறி வைத்து, சரக்கு லாரி மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை வேளையில், சோதனைச் சாவடியைக் கடந்து செல்ல முயன்ற சரக்கு லாரியை வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.
சோதனைக்காக அதனை ஓரமாக நிறுத்துமாறு வீரர்கள் உத்தரவிட்டனர். அப்போது அந்த லாரியில் பொருத்தப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
இதில் 20 வீரர்கள் உள்பட 51 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 72 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 11 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தாக்குதலில் பலியான பெரும்பாலானோர் காரில் வந்த பொதுமக்கள். இவர்கள் சோதனைச் சாவடி வரிசையில் காத்திருந்த போது பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இராக்கில் கணிசமான பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள், அந்நாட்டில் பல இடங்களில் வெடிகுண்டுத் தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றனர்.
எனினும் ஹில்லா பகுதி அரசுக் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்ஐஆா் பணிகளாலும் வாக்குப்பதிவு அதிகரிப்பு!

வாக்கு சதவிகிதம் அதிகரிப்பா? தலைமைத் தேர்தல் ஆணையரின் நகைச்சுவை: திமுக

அதிருப்திக்கு மத்தியிலும் நரிக்குறவா்கள் ஆா்வமுடன் வாக்களிப்பு

20 நிமிஷத்தில் 1,320 கிலோ அரிசி வேக வைக்கும் பாத்திரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

