முனிச்: ஜெர்மனியின் முனிச் நகரில், துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 9 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவனும் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இது குறித்து ஜெர்மன் நாட்டு காவல்துறை கூறுவதாவது, அதிக மக்கள் நடமாட்டம் மிகுந்த முனிச் மாலுக்குள் துப்பாக்கியோடு நுழைந்த ஜெர்மனி-இரானியனான இளைஞன் ஒருவன், பொது மக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டான்.
இதில், 9 பேர் பலியாகினர். இறுதியாக அந்த இளைஞன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான் என்று தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவில் கடந்த ஒரு வாரத்தில் நடக்கும் 3வது அசம்பாவிதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவன் இரட்டைக் குடியுரிமை பெற்றவன் என்பதும், இதுவரை அவன் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சு!
லெனின் பாண்டியன் படத்தின் முதல் பாடல் எப்போது?
தெலங்கானா மேலவை உறுப்பினர்களாக அசாருதீன், கோதண்டராமை நியமிக்க ஆளுநர் ஒப்புதல்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

