கொல்கத்தாவின் பர்பகன் நகரத்தில் 14 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பர்பகன் நகரத்தில் வசித்து வருபவர் பிட்டு தாஸ் (14), ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன். கடந்த ஞாயிறன்று இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
பதற்றத்தில் இருந்த பெற்றோருக்கு திடீரென தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் சுபாசிஸ் தாஸ் என்று நபர் தொலைபேசியில் பேசினான். தங்கள் மகனை கடத்தி வைத்துள்ளதாகவும், ரூ.50 ஆயிரம் கொடுத்து மகனை மீட்டிக்கொள்ளுங்கள். இல்லையெனில் தங்கள் மகனை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளான்.
சிறுவனின் தந்தை நிர்மல் தாஸ் பணம் தர மறுத்துவிட்டதால் சிறுவன் அநியாயமாக கொல்லப்பட்டான். பின்னர் போலீசார் உதவியுடன் மொபைல் கோபுரம் மூலம் மர்ம நபரை கைது செய்தனர். பின்னர், குற்றவாளியிடம் விசாரணை நடத்துகையில், சிறுவனை கடத்தி கொலை செய்ததாக தன்னுடைய குற்றத்தை ஒப்பு கொண்டான். தனக்கு கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக பணம் தேவைப்பட்டது. அதனால், சிறுவனை கடத்தி கொலை செய்ததாக குற்றவாளி தன்னுடைய குற்றத்தை ஒப்பு கொண்டான். அதன்பின்னர், அவன் கைது செய்யப்பட்டதாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

