இந்த ஆண்டின் சிறந்த வார்த்தையாக ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆனந்த கண்ணீர் 'ஈமோஜி'-தான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ள டுவிட்டர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட தகவல் பரிமாறும் செயலிகளில் 'ஈமோஜி' எனப்படும் பல்வேறு வகையான சிறு படங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன.
கடந்த ஏப்ரல் 2014 முதல் ஜூலை 2015 வரையான காலங்களில், தொலைகாட்சி தொடர்பான டுவிட்டர் செய்தி தகவல் பரிமாற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஈமோஜி குறித்து அந்நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.
இதில், அதிக அளாவக ஆனந்த கண்ணீருடன் கூடிய ஈமோஜி 24 சதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக இதயவடிவிலான கண்களுடன் கூடிய ஈமோஜி 12 சதமும், அழுகை முகம் 8 சதமும், பிராத்தனை கைகள் 6 சதமும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
டுவிட்டர் பக்கங்களில் கடந்த ஏப்ரல் 2014ல், அறிமுகம் செய்யப்பட்ட இந்த வகை ஈமோஜிகள் செய்தி பரிமாற்றத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என டுவிட்டர் நிறுவனத்தின் தரவுகள் அதிகாரி ஜோ குரூஸ் கூறியுள்ளார்.
தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும் போது செய்யப்பட்ட டுவிட்டுகளில் அதிக அளவிலான ஈமோஜிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நிகழ்ச்சிகள் குறித்த விமர்சனங்கள் ஒரே படத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு சிறிய படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமமாக இருந்துள்ளது.
மேலும், இந்த ஈமோஜியை பயன்படுத்துவதில் 24 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடையோரே (86 சதம் பேர்) முன்னணியில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதிலும், ஆண்களை (43%) விட பெண்களே (57) ஈமோஜியை பயன்படுத்துவதில் அதிக ரசனையுடன் இருந்துள்ளனர்.
இந்த ஈமோஜிகள் விளையாட்டாக மட்டுமல்ல, பெரு நிறுவனங்களின் விளம்பரங்களிலும் தூதுவராக பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக டுவி்ட்டர் நிறுவனம் அந்நிறுவனங்களிடம் பணம் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுக கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும்: ஓபிஎஸ்

பேருந்து சேவை இல்லாததால் பயணிகள் சாலை மறியல்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


