மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ராணி எலிசபெத் இறந்துவிட்டதாக பிபிசி நிருபரின் தவறான ட்வீட்டால் பரபரப்பு!

இரங்கல் செய்தி தொடர்பாக பிபிசியில் நடந்த ஒத்திகையின்போது கவாஜா தவறுதலாக இப்படி ட்வீட் செய்துவிட்டார்...

Updated On :4 ஜூன் 2015, 11:46 am

பிரிட்டன் ராணி எலிசபெத் இறந்துவிட்டதாக பிபிசி நிருபர் ஒருவர் தவறுதலாக ட்வீட் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பிபிசி பெண் செய்தியாளர் அஹ்மன் கவாஜா தன் ட்விட்டர் பக்கத்தில், ராணி எலிசபெத் இறந்துவிட்டார் என்று எழுதினார். பிறகு, ராணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ட்வீட் செய்தார். இவர் பிபிசி நிருபர் என்பதால் உலகம் முழுக்க உள்ள பலரும் அவரைத் தொடர்கிறார்கள். இந்த ட்வீட்களைப் பார்த்த பலரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். பிபிசி நிருபர் தவறுதலாக ட்வீட் செய்யமாட்டார் என்று நம்பியதால் பலரும் ராணி இறந்துவிட்டார் என்றே நம்பினார்கள்.

பிறகுதான் தெரிந்தது, இரங்கல் செய்தி தொடர்பாக பிபிசியில் நடந்த ஒத்திகையின்போது கவாஜா தவறுதலாக இப்படி ட்வீட் செய்துவிட்டார் என்று. தன் தவறை உணர்ந்தபிறகு உடனே கவாஜா அந்த ட்வீட்களை நீக்கிவிட்டார். அதற்குள் இந்தச் செய்தி உலகம் முழுக்கப் பரவிவிட்டது. கவாஜாவின் இந்தத் தவறான நடவடிக்கையால் பிபிசியும் அரண்மனை நிர்வாகமும் விளக்கம் அளிக்கவேண்டிய நிலைமைக்கு ஆளானார்கள்.

Story image

'இரங்கல் செய்தி தொடர்பான ஒத்திகையின்போது, பிபிசி நிருபர் தவறுதலாக ட்வீட் செய்துவிட்டார். அந்த ட்வீட்கள் நீக்கப்பட்டுவிட்டன. இதற்காக மன்னிப்பு கோருகிறோம்’ என்று பிபிசி தரப்பு விளக்கம் அளித்தது. இந்தத் தவறுதலான ட்வீட்டால் பக்கிங்ஹாம் அரண்மனையும் ராணி நலமாக உள்ளார் என விளக்கம் அளிக்க வேண்டியதாயிற்று.  'ராணி நலமுடன் உள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்று, அரண்மனைக்கு திரும்பி விட்டார்' என்று அறிக்கை வெளியிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.